மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர்..

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவரது உறவினர் மெகுல் சோக்ஷி. இவர்கள் இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி வரை கடன் பெற்று, அந்த கடன் தொகையை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினர்.

முன்னதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவும் இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிய விட்டார். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இவர்கள் இருவர் மட்டுமின்றி மொத்தம் 31 பேர் இதேபோல் மிகப்பெரிய பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே. அக்பர் மக்களவையில் நேற்று தெரிவித்துள்ளார்.

விஜய் மல்லையா, நீரவ் மோடி, அவரது மனைவி ஆமி மோடி, மகன் நீஷல் மோடி, மெஹூல் சோக்சி, லலித் மோடி, சஞ்சய் பண்டாரி, ஆகியோர் உட்பட மொத்தம் 31 பேர் மிகப்பெரிய பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு இந்தியாவை விட்டு தப்பியோடி விட்டனர் என அக்பர் தெரிவித்துள்ளார்.

சவுமித் ஜெனா, விஜய்குமார் ரெவாபாய் படேல், சுனில் ரமேஷ் ரூபானி, புஷ்பேஷ் குமார் பைட், சுரேந்தர் சிங், ஆங்கட் சிங், ஹர்சாஹிப் சிங், ஹர்லீன் கவுர், ஆஷிஷ் ஜோபன்புத்ரா, ஜதின் மேத்தா, சேத்தன் ஜெயந்திலால் சாண்டேசரா, திப்தி சேத்தன் சந்தேசரா, நிதின் ஜெயந்தில் சண்தேசரா, சப்யா சேத், நிலேஷ் பரேக், உமேஷ் பரேக், சன்னி கல்ரா, ஆர்த்தி கல்ரா, சஞ்சய் கலரா, வர்ஷா கலரா, ஹேமந்த் காந்தி, இஷ்வர்பாய் பட், எம்.ஜி. சந்திரசாகர், சேரியா வன்னரக்கல் சுதீர், நவுஷா கடீஜத் மற்றும் செரியா வெட்டில் சாடிக் ஆகியோர் இந்தியாவை விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவர்கள் செய்த மோசடி எவ்வளவு, எப்போது இவர்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள் என்ற விபரத்தை மத்திய இணை மந்திரி அளிக்கவில்லை.

TAGS: