லிங்காயத்துகள் இந்துக்கள் அல்ல- தனி மதமாக அங்கீகரித்தது கர்நாடகா அரசு

பெங்களூரு: தங்களை வீர சைவர்கள் என அறிவித்துக் கொள்ளும் லிங்காயத் சமூகத்தினரை தனி மதமாக கர்நாடகா அரசு அங்கீகரித்துள்ளது.

லிங்காயத்துகள் தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்ள விரும்பவில்லை; வீர சைவர்கள் என தனி மதமாக அங்கீகரிக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

லிங்காயத்துகளின் இந்த கோரிக்கை பாஜக உட்பட இந்துத்துவா அமைப்பினரை அதிர்ச்சி அடைய வைத்தது. அதே நேரத்தில் கர்நாடகா ஆளும் அரசு இக்கோரிக்கையை ஆதரித்தது. இது தொடர்பாக குழு அமைத்து பரிந்துரைகளையும் பெற்றது கர்நாடகா அரசு.

இதனிடையே லிங்காயத்து சமூக மடாதிபதிகள் நேற்று முதல்வர் சித்தராமையாவை சந்தித்து இது குறித்து விவாதித்தனர். இந்நிலையில் இன்று கர்நாடகா அமைச்சரவை லிங்காயத்துகளின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்தது. இக்கூட்டத்தின் முடிவில் லிங்காயத்துகளை தனி ஒரு மதமாக அங்கீகரிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: