ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ஹல்மத்போரா காட்டுப்பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ராணுவத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதும் ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் வேட்டை நடைபெற்று வந்தது.
அந்தப் பகுதியில் நேற்று தொடர்ந்து பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையை போலீசாரும், ராணுவத்தினரும் நடத்தினர். எல்லைத் தாண்டி வந்த பயங்கரவாதிகள் என தெரிவிக்கப்படுகிறது. 4 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டு வீழ்த்திய நிலையில் 2 பயங்கரவாதிகள் காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை இன்றும் பாதுகாப்பு படை மேற்கொண்ட போதும் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பலத்த துப்பாக்கிச்சண்டை நடந்தது.
இதில் 4 போலீசாரும், 2 ராணுவ வீரர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 போலீசார், 2 ராணுவ வீரர்கள் என 4 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 2 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பயங்கரவாதிகளை தேடும் வேட்டை தொடர்ந்து நடைபெறுவதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகிறது.
-dailythanthi.com
இது ஒரு தொடர்கதை– இந்த ஊடுருவல்களை கட்டுப்படுத்த முடியாத இந்தியா ஒரு வல்லரசாக முடியுமா? அங்கு தான் குற்றவாளிகள் அரசியல் கட்சி ஏற்படுத்தலாம் என்று ஆளும் அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறி இருக்கிறதே– இதிலிருந்து தெரிய வில்லையா அங்குள்ள வண்டவாளம்? நேற்று தமிழ் நாட்டில் இரு காவல் துறையினர் தற்கொலைக்கு முயன்றனர்-காரணம் காவல் துறையில் இருக்கும் ஜாதி விவகாரம். என்ன ஜென்மங்களோ.