நாடு முழுவதும் விவசாயிகள் வறட்சி காலங்களில் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள். அவர்களால் வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாமல் நெருக்கடிக்கு ஆளாகும் நிலையில் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில்தான் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். அதற்கு அடுத்த படியாக கர்நாடகத்திலும், மத்தியப் பிரதேசம் 3-வது இடத்திலும், தெலுங்கானா 4-வது இடத்திலும், தமிழகம் 5-வது இடத்திலும் உள்ளது.
2016-ம் ஆண்டு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி தமிழகத்தில் 381 விவசாயிகள் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. மற்ற மாநிலங்கள் விவரம் வருமாறு:-
2015-2016-ம் ஆண்டுகளில் தற்கொலை செய்த விவசாயிகள் விவரம் வருமாறு:-
2016-ல் நாடு முழுவதும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என மொத்தம் 11,370 பேர் தற் கொலை செய்து இருக்கிறார்கள். இவர்களில் 5019 பேர் விவசாய தொழிலாளர்கள் ஆவார்கள்.
இதுபற்றி தெலுங்கானா விவசாயிகள் சங்க செயலாளர் கொண்டல் ரெட்டி கூறுகையில் வறட்சியால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். விவசாய தொழிலாளர்களும் வேலையின்றி வறுமையில் தற்கொலை செய்கிறார்கள். பல சம்பவங்களில் போலீசார் சரியான முறையில் வழக்குப் பதிவு செய்வதில்லை என்றார்.
-athirvu.com