உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூர் நகரில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் அஜித் மோகன் சவுத்ரி. இவர் கடந்த ஒரு மாதமாக ஏழை மக்களுக்காக பிளாட்பாரங்களில் இலவச மருத்துவம் பார்த்து வருகிறார். மேலும், நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளையும் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்து வருகிறார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஏழை மக்களுக்காக பாடுபட்டு வரும் இதுபோன்ற டாக்டர்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும். மற்ற டாக்டர்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக அமையும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கான்பூர் டாக்டர் அஜித் மோகன் சவுத்ரியின் சேவையை கேள்விப்பட்ட பிரதமர் மோடி அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நேற்று நடந்த மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிர்தமர் மோடி, இலவச மருத்துவம் பார்க்கும் அஜித் மோகன் சவுத்ரிக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், கான்பூரை சேர்ந்த டாக்டர் அஜித் மோகன் சவுத்தரி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடையாக பயணம் செய்யும் செய்தியை கேட்டபோது நம் நாட்டின் சகோதரத்துவத்தை உணர எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது என்றார்.
இலவச மருத்துவம் பார்க்கும் டாக்டர் அஜித் மோகன் சவுத்ரிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
-athirvu.com