கும்பகோணம்: கும்பகோணத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து தேசியக் கொடியை எரித்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கும்பகோணம் சுவாமிமலையை சேர்ந்தவர் பிரபுபதி. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிகிறார். இந்நிலையில் இன்று இவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து முழக்கமிட்டார்.
பின்னர் திடீரென்று, தேசிய கொடியை எரித்தார். அத்துடன் நில்லாமல் அதை வீடிய ோ எடுத்து, சமூக வலைதளங்களிலும் பரவ விட்டார். ஆசிரியரின் இந்த செயல் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.விரைந்து வந்த போலீசார் தேசிய கொடியை எரித்ததாக பிரபுபதியை கைது செய்தனர்.
-tamil.oneindia.com


























தனி தமிழ் நாடே தமிழர்களை காப்பாற்ற முடியும்.