தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்துக்குட்பட்ட கச்சிடூரா மற்றும் டிரகாட் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதேபோல், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பேத் டியல்காம் பகுதியிலும் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாட பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்று மாலை நிலவரப்படி, மூன்று பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பினருக்கும் இடையிலான மோதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்ததாகவும், பொதுமக்களில் இருவர் உயிரிழந்ததாகவும், சுமார் 40 பேர் காயமடைந்ததாகவும் ஜம்முவில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு ஜம்மு-காஷ்மீர் மாநில முதல் மந்திரி மெகபூபா முப்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-athirvu.com