சென்னை: என்எல்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினாலே மத்திய அரசு அச்சப்படும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் அலட்சியமாக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என அவர் கூறினார்.
கைது, வழக்குகளைக் கண்டு அச்சப்படவில்லை என்றும் தி. வேல்முருகன் தெரிவித்தார். மேலும் தமிழக மக்களின் மீது பல திட்டங்கள் திணிக்கப்படுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
காவிரி நீரை பெற்றுத்தரவேண்டியது மத்திய அரசின் கடமை என்ற அவர், காவிரி விவகாரத்தில் அடையாளப் போராட்டம் தேவையில்லை என்றும் கூறினார். மத்திய அரசு நிறுவனமான என்எல்சியை முற்றுகையிட்டு பிரமாண்ட போராட்டம் நடத்தினால் மத்திய அரசு அச்சப்படும் என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.