தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடையாத காலக்கட்டத்தில் புறாக்கள் செய்திகள் அனுப்ப பயன்படுத்தப்பட்டன. புறாக்களின் மூலம் செய்தி அனுப்பப்படும்போது அவை மெல்லிய தாளில் எழுதப்பட்டு ஒரு குழலில் அடைக்கப்பட்டு அவற்றின் கால்களில் இணைக்கப்படுகின்றன. பயிற்சி பெற்ற புறாக்கள் 75 கிராம் எடை வரை கொண்டுசெல்ல வல்லவையாகும்.
பின்னர் செல்போன், இணையம் போன்று தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த நிலையில் புறா மூலம் செய்தி அனுப்புவது குறைந்து விட்டது. இந்நிலையில், ஒடிசா காவல்நிலையங்களில் இன்றளவும் புறாக்கள் மூலம் செய்திகள் அனுப்பப்படுகின்றன.
இவை புவனேஷ்வரிலிருந்து கத்தாக் நகருக்கு ஒரு மணி நேரத்தில் கடந்து செய்திகளை அனுப்புகின்றன. இதற்காக புறாக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலத்தில் ஒடிசாவில் இன்னும் புறாக்கள் மூலம் செய்தி அனுப்பும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.