அமீபாவைப் போல் சுற்றிக் கிடக்கும் அவலங்கள்.. கவனமாய் இருப்போம்.. கண்ணியமாய் வாழுவோம்!

சென்னை: ஆபாச பேச்சில் மாணவிகளுக்கு அநீதி பெண் பேராசிரியர் கைது இது இன்றைய செய்தி, பள்ளிகளில் கல்லூரிகளில் இதேபோன்று எத்தனையோ நிகழ்வுகள் ஆசிரியர் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்தார். கூடப்படிக்கும் மாணவனால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவி, இன்னும் ஆயிரம் சிலந்தி வலைகளுக்கு நடுவில் தான் நம் பிள்ளைகள் அனைத்தும் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள அனுப்படுகின்றனர்.

ஒவ்வொரு கல்வியாண்டின் இறுதியிலும் எத்தனை மாணவ மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். அதற்கெல்லாம் காரணம் மதிப்பெண்கள் மதிப்பில்லாத அந்த எண்களின் கூட்டுத் தொகைக்கு இருக்கும் கெளரவம் நாம் பெற்ற பிள்ளைகளுக்கு ? படிப்பு படிப்பு என்று இறுதியாண்டு பாடத்தையும் முதலாண்டிலேயே தலையில் ஏற்றி மாணவர்களை இயந்திரங்களாக்கி 1200க்கும், 500க்கும் பெற்ற பிள்ளைகளின் வாழ்க்கையினை அடமானம் வைத்துவிடுகிறோம்.

நேற்று கல்யாணம் ஆன தம்பதிகள் கூட என் பிள்ளை இந்தப் பள்ளியில் தான் படிக்க வேண்டும். உங்க பிள்ளைகள் இத்தனை பெரிய பள்ளியில் படிக்கிறார்களா ? என்னது அவர்கள் தான் பள்ளியில் முதல் மதிப்பெண்ணா ? நீங்க கொடுத்து வைச்சவங்க. உங்க பிள்ளைகள் எல்லாத்துலேயும் பர்ஸ்ட். எனக்கும் பொறந்திருக்கே இப்படி அநேக வார்த்தைகளை கேட்டு பூரித்துப்போக நாம் அடிமாடாய் ஆக்குவது நம் பிள்ளைகளைத்தான்.

எல்.கே.ஜி படிக்கும் பிள்ளைக்கு ரிவிஷன், MID TERM, அரையாண்டு முழுஆண்டு அதற்கு ஆறு சப்ஜெக்ட், 60 ரூபாய்க்கு சரக்கு வாங்கிக் கொடுத்து உளறும் குடிகாரனைப் போல் அந்தப் பிள்ளைக்கு உங்கள் பெருமை போதையை ஏற்படுத்தி திணித்து, வாந்தியெடுக்க வைக்கும் பெற்றோர்கள் நாம் என்று மார்த்தட்டிக் கொள்ளலாம். ஐந்து வயதுபிள்ளை ஆங்கிலம் பேசவில்லை என்றால் தண்டப்பணம் கட்டவேண்டும். லட்ச ரூபா கொட்டி படிக்க வைக்கிறேன் நாலுபேர் முன்னாடி ஸ்டைலா மம்மி டேடின்னு கூப்பிடாம அம்மா அப்பான்னு அசிங்கமா கூப்பிடுது இப்படி எத்தனை வீடுகளில் பெற்றோர்கள் அங்கலாய்ப்பதைக் கேட்டு இருக்கிறோம். நாம் பெற்ற பிள்ளைக்களுக்கு இன்று என்னனென்ன தரத் தவறி இருக்கிறோம் தெரியுமா ?

கம்ப்யூட்டர் திரையிலும் செல்போன் திரையிலும் இருந்து பார்வையை விலக்கினாலே பக்கத்தில் இருக்கும் மனித முகங்களின் அன்பும், அக்கறையும், அவமதிப்பும், அறுவெறுப்பும் தெரியும். வீடியோ கேம்ஸ்கிட்ட அவன் பத்துவிரல்களைக் கொடுத்துவிட்டு அரக்கத்தனமாக வியர்வை குலுங்கும் விளையாட்டை மறக்கடித்து விடுகிறோம். முதல் நாள் பள்ளிக்குப் போகும்போதே நல்லா படிக்கணும், நிறைய மார்க் வாங்கணும் அப்பா அம்மா பேரை காப்பாத்தணும் சரியா ? அநேக தலையாட்டல்களுக்குப் பிறகு போகும் பிள்ளை நான்கு நாட்கள் தொடர்ந்தாற் போல் அழாமல் இருக்கு சரிகைப் பேப்பர் சுற்றிய சாக்லெட், முட்டிதொடும் ஸ்கர்ட்டுகள் அவை பள்ளி யூனிபார்களாய் !

சில பள்ளிகளில் உள்ளே போடும் ஐட்டியைக் கூட அங்கேதான் வாங்க வேண்டும். ஒவ்வொரு வயது வந்த பெண்ணிற்கும் அரசாங்கம் தரும் அந்த மென்ஸஸ் பேட் கூட ஐந்து ரூபாய்க்கு விற்கும் அவலம். பாப்பா படிக்கிற ஸ்கூல்ல ஸ்மிங், டைவிங், ராத்தே, ஹார்ஸ்ரைடிங், ஸ்டேட்டிங் பிரகாஷ் ராஜ் ஒரு படத்தில் கேட்பார் சரியாக நடக்கவே தெரியாத பிள்ளைக்கு எதுக்கு இதெல்லாம். இயக்குநர் ராதாமோகனின் தோனி என்ற படம் அதில் தனக்கு தெரியாத கேள்வியை மாணவர்களிடம் கேட்டு விடை சொல்லவில்லை என்று மட்டம் தட்டுவார் ஆசிரியர். புத்தகத்தின் அத்தனை வரிகளையும் மனப்பாடம் செய்தால் மட்டும் தான் அவன் அறிவாளி. புரியவைக்கும் நேரமும் புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கும் இல்லை நமக்கும் இல்லை விளையாட்டு செய்திகள் ஐபிஎல்லில் சிக்சர்கள்… புதிய சாதனைகளை படைத்தார் மும்பையின் ரோஹித் சர்மா சமூகதளங்களில் புருவ அழகி பிரியாவை பின்தள்ளி முன்னேறி வரும் இளம் கிரிக்கெட் வீரர் எட்டு ஆண்டுகளில் ஏழு ஐபிஎல் அணிகள்… ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் அபூர்வ சாதனை.

யோசியுங்கள் பெயிலான எத்தனையோ பிள்ளைகளின் முதுகு தோல் அப்பாவின் இடுப்பு பெல்ட்டால் உரிக்கப்பட்டு இருக்கிறது. படிக்கவேண்டும் படிக்கவேண்டும் என்று சிரிக்க கூட மறந்து போன பிள்ளைகளின் இறுகலான மனங்களை சீர் செய்ய எத்தனை யுக்திகள் அதுவும் வியாபாரம் இங்கே எல்லாமே வியாபாரம் தான் மார்கெட்டிங்தான், என் பள்ளிதான் டாப்பர். நாங்கதான் புல் ரிசல்ட் கொடுத்து இருக்கோம் அதனால் அடுத்த வருட வியாபாரம் ஜரூராக நடக்கும். நாமும் அந்த ரேசில் குதிரையின் மேல் பணம் கட்டுவதைப் போல நம் பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணத்தை கட்டுகிறோம்.

10 வது படித்து விட்டு மதிப்பெண் அதிகமாகயில்லை என்று உயிரை மாய்த்துக்கொள்ளும் பிள்ளைகள் ஒருபுறம் என்றாலும் இன்னொரு பக்கம் ஏதோ நான் மார்க் கம்மியாய் போச்சு அப்பா அம்மா வருத்தப்பட்டாங்க இனிமே நல்லா படிக்கணுமின்னு பதினோராம் வகுப்புக்கு போறான். நான்கு ஸ்கூல் மார்க் வரும் முன்பே 1000ரூபாய் வரை விற்கப்படும் பள்ளியின் விண்ணப்ப படிவங்கள், ஒவ்வொரு பள்ளியின் வாசலில் இந்தப் பள்ளியில் சீட் கிடைச்சிடுமா இங்கே கிடைச்சிடுமா என்று எதிர்நோக்கி காத்திருக்கும் பெற்றோர்கள் வாசலில் பிச்சையெடுப்பவர்களை விரட்டும்போது ப்யூன் கூட அங்கே மூலஸ்தானத்தில் இருக்கும் தெய்வங்களில் ஒருவனாய் தெரிவார்.

மதிப்பெண் கம்மி அந்த ஸ்கூல் பிரின்ஸிபால் எத்தனை அசிங்கமா பேசினான் பாத்தியா அப்படியே நாண்டுகிட்டு சாகலாம் போலஇருக்கு என்ன பண்றது என் தலையெழுத்து எதையாவது வித்து யார் கையிலே கால்ல விழுந்தாவது நான் கடன் வாங்கி பீஸ் கட்டறேன் நீ படிச்சு தொலை, இப்படி பெற்றோர். போன வருஷமே உருப்படியா படிக்கலை நீயெல்லாம் இந்த கிளாஸ் வருவேன்னே நான் நினைக்கலை இப்படி டீச்சர்ஸ், சிலர் கொஞ்சம் மேல போய் எனக்கு கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணு இல்லைன்னா இண்டர்னல் மார்க்கில் கை வைச்சிடுவேன். எத்தனை பிள்ளைகள் தங்கள் மேல் போர்த்தப்படும் மதிப்பெண் என்னும் போர்வைக்காக உடலை நிர்வாணமாக்கிக் கொள்கிறார்கள். மன அழுத்தம் தாளாமல் எத்தனை பிள்ளைகள் ஹாஸ்டல் பேஃனுக்கு மாலையிடுகிறார்கள். அன்று நாம் தடுமாற எந்த யுக்திகளும் இல்லை டிவியில் ஒரு அசிங்கமான சீன் வந்தால் பெற்றோர்களோ தாத்தா பாட்டிகளோ டிவியின் முன்னால் நின்று கொள்வார்கள். அம்மா அப்பா நம் முன்னாடி சேர்ந்து உட்கார்ந்து பார்த்தது இல்லை, தேவைகள் தெளிவாய் தீர்க்கப்பட்டன.

இன்று அவன் படிக்க உட்காரும் நேரம் டிவியில் சீரியல், கார்ட்டூன், கேம்ஸ், இண்டர்நெட் என திசை திருப்பும் நிகழ்வுகள் ஏராளம் அதிலும் தன்னம்பிக்கையாய் அவன் படிக்க முன்வருகிறான் ஆனால் அடுத்த குதிரையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க நாம் அவனுக்கு போதை மருந்துபோல் வெறியை ஊட்டுகிறோம். இன்னைக்கு இந்த மார்க் போச்சுன்னா அப்பா திட்டுவார், பாவம் அம்மா கஷ்டப்பட்டு பணம் கட்டுறாங்க, நான் இந்த பரிட்சையை முடித்தால் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றலாம். இந்த பணம் கிடைத்தால் குடும்ப கஷ்டம் தீரும், போனவாரம் டிவியில காண்பித்த அலங்காரப் பொருளை வாங்கலாம் இப்படி ஒவ்வொரு நிலைக்கும் போராடி போராடி ஏதோ ஒரு கட்டத்தில் உடல் தானே என்று நினைப்பு வந்து விடுகிறது பிள்ளைகளுக்கு ஆசிரியருக்கு அட்ஜெஸ் பண்ணினா மார்க் கிடைக்கும் என்றும் எத்தனை பிள்ளைகள் மனசாட்சியினை அடமானம் வைத்து சித்தரவதைக்கு ஆளாகுகிறார்கள்.

பிள்ளைகளை மதிப்பெண் அடிப்படையில் வளர்க்காதீர்கள் பெற்றோர்களே இப்படி மதிப்பெண் அதிகம் கிடைக்கும் என்று ஏமாற்றும் பெருச்சாளிகளின் கையில் திண்பண்டமாய் நம் பிள்ளைகளின் வாழ்க்கைப் போகாது. நாம் படும் அவலங்களை சொல்லி புரியவையுங்கள் நீ மட்டும் தான் மாற்று என்று அதன் மேல் திணிக்காதீர்கள். மாற்றம் நம்மில் இருந்து மற்றவர்களை வந்துபார் என்று ஜல்லிக்கட்டு காளைகளாய் துள்ளி வருவார்கள் நம் பிள்ளைகள். பெற்றோரைக் காட்டிலும் உங்களுடன் தான் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் பிள்ளைகள் ஆசானாய் விளங்கும் ஆசிரியர்களே காமம் கற்றலில் இருக்கக்கூடாது.

நீங்கள் உருவாக்கப் பிறந்தவர்கள், கடவுளுக்கும் மேலான உங்கள் அடையாளத்தை காம அமிலம் வைத்து அழித்துக்கொள்ளாதீர்கள். பேராசிரியர் மாணவிகளின் உடலை பிச்சையாய் கேட்கிறார், தவறையும் அவர்களே மேலேயே திணிக்கிறார். இம்மாதிரி அற்பமான புல்லுருவின் கையில் நம் பிள்ளைகள் சூழ்நிலைக் கைதியாய் நிற்கவிடாமல் காப்போம். எல்லாவற்றையும் புறக்கணியுங்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்ளுங்கள். ஒருபுறம் புதுவகையான நோய்கள், உயிர் குடிக்கும் உணவுப் பொருட்கள், காற்றில் நச்சு, குடிக்கும் நீரில் மிதக்கும் கிருமி, வேண்டாம் நம்மைச் சுற்றி அமீபாவைப் போல் அவலங்கள் சுற்றிக் கிடக்கிறது கவனமாய் இருப்போம் கண்ணியமாய் வாழுவோம்.

  • எழுத்தாளர் லதா சரவணன்

tamil.oneindia.com

TAGS: