தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீர் திறந்து விட கர்நாடகவிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்

புதுடெல்லி,

காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவடையும் நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில்  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

காவிரி வழக்கு விசாரணையை நேரில் பார்வையிட சுப்ரீம் கோர்ட்டுக்கு சி.வி. சண்முகம் வருகை தந்துள்ளார்.  அதிமுக எம்பிக்கள் நவநீதகிருஷ்ணன், சுந்தரம், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரமும் வருகை தந்து உள்ளனர்.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது. வழக்கு தொடங்கியதும் மத்திய அரசு சார்பில்  காவிரி வழக்கில் வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டில்  கால அவகாசம் கேட்டு உள்ளது.  மேலும் வரைவு திட்டம் தயாராகி விட்டது. கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் இருப்பதால் மத்திய அமைச்சரவையின் ஓப்புதல் பெற முடியவில்லை என தெரிவித்து உள்ளது.

தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீர் திறந்து விட கர்நாடகவிற்கு  சுப்ரீம் கோர்ட் உத்தரவு  பிறப்பித்து உள்ளது. மேலும்  கர்நாடகா உத்தரவை மீறினால்  கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்  என சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

கர்நாடகா சார்பில்  அரசு 4 டிஎம் சி நீர் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டது.  காவிரி நீர் தரமுடியுமா? முடியாதா?  கர்நாட்காவில் தேர்தல் என்பதை எல்லாம் நாங்கள் ஏற்க முடியாது  காவிரி பிரச்சினையில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது. வரைவு திட்டம் அமைப்பது தொடர்பாக, மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.  தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுத்தால் கர்நாடக தலைமை செயலாளரை நீதிமன்றத்திற்கு அழைக்கும் நிலை ஏற்படும்  என சுப்ரீம் கோர்ட் எச்சரித்தது.ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை உடனே திறந்துவிட வேண்டும். தற்போது செயல் திட்டம் அமலில் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறப்பது கர்நாடக அரசின் கடமை என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் வழக்கை வரும் சுப்ரீம் கோர்ட் 8 ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

-dailythanthi.com

TAGS: