“காவிரி வாரியத்தை மறுக்கிறது, வேண்டாத நீட்டை திணிக்கிறது மத்திய அரசு”

காவிரி வழக்கில் அமைச்சர்கள் பலரும் கர்நாடகத் தேர்தல் பணியில் இருப்பதால் காவிரி மேலாண் வாரிய விவகாரத்தில் முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கேட்டுள்ளது.

மத்திய அரசு தமிழகப் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் தொடர்ந்து வஞ்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு சரியா? என வாதம் விவாதம் பகுதியில் வாசகர்களிடம் கேட்டிருந்தோம். இதற்கு வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

” மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கவில்லை. மாறாக தமிழகத்தின் மீது நஞ்சை உமிழ்ந்து வருகிறது. நாங்கள் கேட்கும் மேலாண்மை வாரியம் தர மறுக்கிறது. எங்களுக்கு வேண்டாத நீட்டை திணித்து இப்போது அதனை வெளி மாநிலங்களுக்கு சென்று எழுதச் சொல்கிறது. ஹைட்ரோ கார்பனையும் நியூட்ரீனோவையும் எங்கள்மீது திணித்து எங்கள் நெற் களஞ்சியத்தையும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பசுமையையையும் பாழாக்கி எங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறது மத்திய அரசு ” என்கிறார் கோமான் முகமது.

”மத்திய அமைச்சர்கள் அனைவரும் கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளனர். தமிழக அரசு கோமாவில் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார் ராஜ் ராசி.

”மத்திய அரசு தமிழகப் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் தொடர்ந்து வஞ்சிக்கிறது என்பது உன்மைதான்” என்கிறார் வினோத் குமார்.

”மத்திய அரசு இதற்கு பேசாமல் கர்நாடக தேர்தல் முடியும் வரை வழக்கை தள்ளிப்போடுங்கள் என்று நீதிபதியை கேட்டிருக்கலாம். நீதித் துறையை விலைக்கு வாங்கி விட்டது மத்திய அரசு” என பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார் சரோஜா பாலசுப்ரமணியன்.

”அரசு தவறு செய்தால் தட்டி கேட்க வேண்டிய நீதிமன்றமும் செயல் இழந்து நிற்பது நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் செந்தில் குமரன்.

”மறுபடி மறுபடி மக்களை விட தேர்தலும்,பதவியும் தான் முக்கியமென இதை விட வெளிப்படையாகச் சொல்லமுடியாது” என சாந்தகுமார் எழுதியுள்ளார்.

”மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான். மிகச் சரியானது” என அகிலன் எனும் நேயர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். -BBC_Tamil

TAGS: