‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் போராட்டம்

திரைத்துறையில் நிலவும் பாலின பாகுபாடுக்கு எதிராக ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் பல பெண் இயக்குனர்கள் மற்றும் நடிகைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் இயக்குநர்களின் திரைப்படங்கள் அதிகளவில் திரையிடப்படுவதில்லை என்று கேன்ஸ் விழா குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.

திரைத்துறையில், ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில், தற்போது இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. -BBC_Tamil