வாரணாசியில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து 30 பேர் பலி

வாரணாசி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் அருகே புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை அந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த மேம்பாலத்தின் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் மற்றும் மேம்பாலம் அருகே நின்றவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 30 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்து உள்ளனர். மேலும் ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி புதையுண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.

மேம்பால இடிபாடுகளில் பஸ்– கார் போன்ற ஏராளமான வாகனங்களும் சிக்கி சேதம் அடைந்து உள்ளன.

தனது சொந்த தொகுதியில் நடந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் பிரதமர் நரேந்திரமோடி தனது அனுதாபத்தை தெரிவித்து உள்ளார்.

-dailythanthi.com

TAGS: