“இந்தியாவில் 19,569 மொழிகள் பேசப்படுகின்றன”

இந்தியாவில் தாய்மொழியாக 19,500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாக கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், அதில் 121 மொழிகளை தவிர மற்ற மொழிகளை பேசுபவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது. 121 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில் 19,569 மொழிகள் பேசப்படுவதாகவும், அவற்றில் 96.71 சதவீதம் பேர் அரசமைப்பு சட்டத்தின் 8ஆவது பட்டியலிலுள்ள 22 மொழிகளில் ஒன்றை தாய்மொழியாக கொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. -BBC_Tamil

TAGS: