காலா இத்தனை கோடி நஷ்டமா? தனுஷின் திடீர் முடிவு..

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருந்த கபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் காலா படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்திருந்தார் ரஜினிகாந்த். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த படி பெரிய அளவில் வசூல் செய்யவில்லை, பஇதனால் தனுஷ் ரூ 40 கோடி நஷ்ட ஈடு கொடுப்பதாக பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பணத்திற்கு ரஜினிக்கு நெருங்கிய தயாரிப்பாளர் ஒருவர் வாங்கி கொடுப்பதாக உறுதியளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் காலா படத்தை வாங்கிய தனுஷ் அந்த பேனரில் ஒரு படம் நடித்து கொடுப்பதாகவும் வாக்கு கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இது சூப்பர் ஸ்டார் மற்றும் தனுஷ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-athirvu.in