மெகா ரெய்டில் சிக்காத 1340 கோடி! எடப்பாடியிடம் கதறிய சம்பந்தி சுப்பிரமணி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தியான சுப்பிரமணியை வருமான வரித்துறை அதிகாரிகள் வலைத்துள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    இதற்கிடையே மற்றொரு சம்பந்தி முறை ஆகிய என்.ஆர்.கன்ஸ்டக்ரஷன்ஸ் ராமலிங்கம்.  இவரது குடும்பம் ஈரோட்டில் உள்ளது.  ராமலிங்கம் மற்றும் சுப்பிரமணி இவர்களுக்கு சொந்தமான கட்டுமான தொழில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா  என தென்மாநிலங்களில் செயல்படுகிறது.   தற்போது நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டில் சங்கிலி தொடர் போல எடப்பாடியின் சம்பந்தியான சுப்பிரமணி மற்றும் ராமலிங்கம் ஆகியோரின் கம்பெனிகளும் இணைந்துள்ளன.  இதை அறாய்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சுப்பிரமணியையும் ராமலிங்கத்தையும் தனித்தனியாக தூக்கிக்கொண்டு போய் விசாரணை வளையத்தில் வைத்துள்ளனர்.

வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணையில் கடந்த 7 வருடமாக முன்பு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தார்.  தொடர்ந்து தற்போதும் நெடுஞ்சாலைத்துறை எடப்பாடி வசமே உள்ளது.   ஆக, 7 வருடமும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் பெரும்பாலும் செய்யாதுரை வசமே சென்றுள்ளது.   இதில், எடப்பாடியின் சம்பந்திகளான சுப்பிரணி, ராமலிங்கத்தின் இணைவு இருந்துள்ளது.   இதைத்தோண்டி துருவிய வருமான வரித்துறை மொத்தமாக இந்த துறையில் 4500 கோடி மெகா முறைகேடு நடந்துள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.    தற்போது செய்யாதுரையிடம் 173 கரன்சியாகவும், 214 கிலோ தங்கமாகவும் கைப்பற்றியதோடு அசையா சொத்துக்கள் பட்டியலையும் கைப்பற்றியுள்ளனர்.

செய்யாதுரையிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட சுப்பிரமணி, ராமலிங்கத்திடம் கரன்சியாக மட்டும் 1340 கோடி இருப்பதாக தெரியவந்துள்ளது.  இது எங்கே உள்ளது? இதனுடைய பின்னணியில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என விசாரணையை தொடரும் ஐடி அதிகாரிகள் ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த தகவலையும் மத்திய அரசுக்கு இன்று கொடுத்துள்ளார்கள்.

இதன் பேரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மொத்தமாக மத்திய மோடி அரசிடம் சிக்கியுள்ளார்.  இதன் தொடர்ச்சியாகத்தான் அவரது இன்றைய செயல்பாடு மத்திய அரசை எதிர்ப்பது போல ஒரு தோரணையை ஏற்படுத்தப்பட்டுள்ளது.   இந்த ரெய்டில் கணக்கில் வராத 1340 கோடி அனைத்தையும் அப்படியே சஸ்பென்சாக வைத்திருப்பதற்கான வேலைகளும் நடை பெற்று வருகிறது.   அரசியல் ரீதியாக எடப்பாடியின் எதிர்காலத்திற்கு கேள்விக்குறியாக இந்த மெகா ரெய்டும் அதனை தொடர்ந்த நடவடிக்கைகளும் உள்ளன.

-nakkheeran.in

TAGS: