பிரபல நடிகர் கிருஷ்ணாவை நடுக்காட்டில் சுற்றி வளைத்து பிடித்த அதிரடிப்படை!

நடிகர் கிருஷ்ணா கழுகு படம் மூலம் பிரபலமானவர். குழந்தை நட்சத்திரமான அஞ்சலி படத்தில் நடித்தவர் விஜய் நடித்த உதயா படத்தில் இளம் தோற்றத்தில் நடித்திருந்தார்.

பிரபல அஜித்தின் பில்லா படத்தை இயக்கிய விஷ்ணு வர்த்தனின் சகோதரர். பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முகம் தெரியப்பட்ட ஒரு நடிகர்.

தற்போது கழுகு படத்தின் 2 ம் பாகம் கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் அவர் செந்நாய்களை வேட்டையாடும் நபராக நடித்து வருகிறார்.

இதற்காக துப்பாக்கி சுடும் பயிற்சியை அங்கு மேற்கொண்டுள்ளார். ஷூட்டிங் நடக்கும் இந்த இடம் தனியாருக்கு சொந்தமானது. இதன் அருகில் அரசுக்கு சொந்தமான இடமும் உள்ளது.

இப்பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி அதிரடி படையின் கண்காணிப்பில் உள்ளது. துப்பாக்கி சத்தம் கேட்டு அங்கு அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் படக்குழுவை சுற்றி வளைத்துள்ளனர். துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.

பின் படபிடிப்பு என தெரிந்ததும் துப்பாக்கியின் லைசென்ஸை காட்டிவிட்டு பெற்று செல்லுமாறு கூறியுள்ளனர்.

-cineulagam.com