புதுடெல்லி, ஐ.நா.வின் குழந்தைகள் இறப்பு கணக்கீடு தொடர்பான குழு அறிக்கையில், இந்தியாவில், சராசரியாக ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் 3 குழந்தைகள் மரணம் அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குடிநீர், துப்புரவு வசதி, முறையான ஊட்டச்சத்து அல்லது அடிப்படை சுகாதார வசதி ஆகியவை இல்லாததே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு இந்தியாவில் 8 லட்சத்து 2 ஆயிரம் குழந்தைகள் மரணம் அடைந்துள்ளன. இது, கடந்த 5 ஆண்டுகளில் மிகக்குறைவு ஆகும். இருப்பினும், உலக அளவில் குழந்தைகள் மரணத்தில் இன்னும் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது.
2016–ம் ஆண்டு, இந்தியாவில் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 67 ஆயிரமாக இருந்தது. குழந்தைகள் இறப்பு குறைந்து வருவதற்கு, தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளே காரணம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
-dailythanthi.com