நீண்டகாலம் கழித்து நயனுக்கு பயம் காட்டிய த்ரிஷா

கிட்டதட்ட ஓய்வுதான் என்கிற அளவுக்கு த்ரிஷாவை வாழ்க்கையின் ஓரத்திற்கே தள்ளிக் கொண்டு போன தமிழ்சினிமா, திடீரென அவருக்கு காயகல்பம் கொடுத்து கவுரவிக்க துவங்கிவிட்டது.

எல்லாம் 96 என்கிற ஒரே ஒரு படத்தால் வந்த மாயம். இப்படம் ஓடும் திரையரங்கங்களுக்கு பர்தா போட்டுக் கொண்டு போன த்ரிஷாவுக்கு அநியாயத்துக்கு ஆச்சர்யம். விஜய் சேதுபதியை விட, த்ரிஷாவின் ரீயாக்ஷன்களை கைதட்டி விசிலடித்து கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

தனக்கு இன்னொரு விண்ணை தாண்டி வருவாயா என்று அவரே சிலருக்கு போன் அடித்து பேசுகிற அளவுக்கு உற்சாகமாகிவிட்டார். சினிமா மார்கண்டேயினி என்ற பட்டத்தை இனி நயனும் த்ரிஷும் ஆளுக்கு பாதியாக பிய்த்துக் கொள்வார்கள்.

-4tamilmedia.com