இந்துக்கள் அமைதியானவர்கள்: மோகன்பகவத்

நாக்பூர்: அயோத்தி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், நாக்பூரில் நடந்த விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தும் விதமாக லட்சக்கணக்கான இந்துக்கள் கூடியுள்ளனர். விஸ்வ இந்து பரிஷத் சார்பில் முக்கிய கூட்டமும் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசுகையில்;அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என நாம் தொடர்ந்து போராடி வருகிறோம். இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. கோர்ட் விரைந்து தீர்ப்பை வழங்க மறுக்கிறது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். ராமர் கோயில் விவகாரத்தில் நாம் ஒற்றுமையாக இணைந்து போராட வேண்டும்.

ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக 30 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இந்துக்கள் அமைதியானவர்கள், 30 ஆண்டு காலமாக பொறுமையாக உள்ளனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது அவசியமானது. மக்கள் கோபமே அயோத்தியில் பெரும் பிரச்சனை ஏற்பட வழி வகுத்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

-dinamalar.com

TAGS: