மாவீரர் நாள்  எழுச்சி நாள் (27 நவம்பர் 1982) விதைந்த எம் இரத்த மான மறவர்களுக்கு மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் வீரவணக்கம்..!

உலக தமிழர்களுக்காக நாடு வேண்டி போராடி, தெரிந்தே உயிர் ஈகை செய்த, இந்த விடுதலை போராட்ட மறவர்களுக்கு, வீர மரியாதை, வீரவணக்கம் செலுத்தும் நாள்.

மண்ணுக்காக வாழ்ந்து பார்..

மரணத்திலும் சரித்திரம் படைப்பாய்..!

ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகத் போராடி, அந்த இலட்சியத்தை அடைவதற்காக தமது வாழ்வைத் தியாகம் செய்த மாவீர்கள் மகத்தானவர்கள்.

தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டத்தை இந்த பூமிப்பந்திலே முதன்மையான போராட்டமாக முன்னிறுத்திய உத்தமர்கள்.

மனித சுயத்தின் ஆசைகளைத் துறந்து, மானுடத்தின் உரிமைகளுக்கான பொதுநல சத்திய இலட்சியத்திற்காகப் போராடி, சாவை தழுவிய புனிதர்கள்.

இறந்தவர்களுக்காக அழுபவர்கள் மத்தியில், அழுபவர்களுக்காக இறக்க துணிந்தவர்கள் விடுதலைப் புலிகள்.

ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல..!

அந்த சாவு ஒரு சரித்திர நிகழ்வு..!

ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெரும் அற்புத நிகழ்வு..!

உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை..!

அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை..!

அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்று சக்தியாக மற்றவர்களை பற்றி கொள்கிறது..!

ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவை தட்டியெழுப்பி விடுகிறது..!

நமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும் நமது மண்ணின் விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான தியாகங்களையும் நினைவு கூறும் இப்புனித நாளில்,

எத்தகைய இடர்களையும், எத்தகைய துன்பங்களையும், எத்தகைய சவால்களையும், எதிர்கொண்டு நமது தாயகத்தில் சுதந்திரத்தை வென்றேடுப்போமென இத்தருணத்தில் உறுதி ஏற்போம்.

களத்தில் ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் மட்டும் போராளிகள் அல்ல

எங்கு தமது இனம் அழிக்கப்படுகிறதோ

அதை கண்டு இங்கு எவரேல்லாம் சினம் கொண்டு சீறி எழுகிறார்களோ

அவர்களும் விடுதலைப் புலி போராளிகளே.

இவர்கள் கண்ட கனவை நனவாக்க, வீழ்ந்து கிடக்கும் நம் மொழி, இனம், சமயம், மண், உரிமை, உடமை மீட்பதற்கு நாம் தமிழராய் ஒரே சிந்தனையில் தமிழர்கென தனி தமிழ் ஈழத்தை வென்றெடுப்பொம்.

விழ விழ எழுவோம், ஒன்பதாய் முளைவோம், வீழ்ந்தாலும் மடிந்தாலும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை..!

வீரவணக்கம்..! வீரவணக்கம்..!

-பாலமுருகன் வீராசாமி

தேசிய வீயூக இயக்குநர்

மலேசிய நாம் தமிழர் இயக்கம்