நம் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம், பிறந்த உடனேயே தமிழ்ப் பள்ளிதான் என முடிவெடுப்போம்

தமிழ்க் கல்வியையும் தமிழ்ப் பள்ளிகளையும்  தமிழர் என்ற அடையாளத்தை காப்போம், தமிழராக தலைநிமிர்வோம்.

இன்றைய சூழ்நிலையில், தமிழ்ப்பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் எண்ணமும் ஆர்வமும் குறைந்து வருவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இதற்கு பல அடிப்படையற்ற காரணங்களும் சில அடிப்படையான காரணங்களும் நம் தமிழர்களிடையே பரவி வருகிறது.

ஆனால் எப்படி இருந்தாலும் தமிழ்ப்பள்ளியில் பிள்ளைகள் பயின்றால் தேர்ச்சி மற்றும் சிறந்து விளங்க முடியாது என்ற அறிவுப்பூர்வமற்ற சிந்தனையும் உளவியல் நோயும் ஆகும்.

தாய்மொழி கல்வியில் பயில்வதே சிறப்பு என்று யுணேசுகோ (UNESCO) ஆய்வு வெளியிட்டுள்ளது. அதையும் தாண்டி, தாய்மொழி கல்வியில் பயின்ற முன்னேறி பெயர் படித்த பல தலைவர்கள் நம் கண் முன்னே காணலாம். ஆங்கிலம் படித்தால் அறிவு என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். அன்பான தமிழர்களே, ஆங்கிலம் என்பது அங்கலோ என்று சொல்லக்கூடிய ஆங்கிலேய இனத்தின் தாய்மொழியாகும், இன்று உலகம் ஆங்கிலேயர் கட்டுபாட்டில் உள்ளதால், ஆங்கிலம் உலகத்தின் தொடர்பு மொழியாகவுள்ளது, மாறாக அது அறிவியலோ அல்லது அறிவோ அல்ல, வெறும் மொழியே, என்ற தெளிவு பிறக்க வேண்டும். ஏறக்குறைய 5 – 7ஆம் நூற்றாண்டில் உருவான மொழி மட்டுமே.

நம் தாய்மொழியோ 50,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது, உலகத்தின் மூத்த மொழி, பல மொழிகளுக்கு தாய்மொழியும் கூட. பெருமை மிக்க மொழியின் இனத்தின் பிள்ளைகளான நாம் நம் தாய்மொழியையும், நம் பள்ளிகளை பாதுகாக்க கடமைப் பட்டிருக்கிறோம்.

தமிழ்ப்பள்ளி தூரம், ஆசிரியர்கள் சரியில்லை, தரமில்லை, என்ற காரணங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு நம் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம்.

தமிழ்ப்பள்ளியில் நம் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்தால், ஆசிரியர்களின் எண்ணிக்கை குறையும் தமிழாசிரியர்கள் வேலை இழப்பு, தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் அதனால் தமிழ் பள்ளிகளின் சொத்துடமை குறையும், தன் சொந்த இனத்தின் தாய்மொழியை அறியாத பிள்ளைகளாக நம் தலைமுறை வளர்க்கப்படும் நாளை இது அவமானத்தின் சின்னமாக நிற்போம் போன்ற சிக்கல்களை உணர்ந்து நம் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம் தமிழ்ப்பள்ளியை பாதுகாக்க வழிவகுப்போம். இன்று ரசியா, சீனா, கோரியா, சப்பான் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் எல்லாம் தன் தாய்மொழியில்தான் அனைத்து கல்வியை பெற்று சிறந்து விளங்கியுள்ளனர் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து, இன்றே உங்கள் பிள்ளக்களை நம்பிக்கையுடன் பதிவு செய்யுங்கள்.

தமிழ்ப் பள்ளியே தமிழர்களின் நிரந்தர தேர்வு

மொழி இனத்தின் அடையாளம், அந்த அடையாளத்தின் விதை நம் பள்ளிதான் அதை காப்போம்

மலேசிய நாம் தமிழர் இயக்கம்