இந்தியாவுக்கு உதவும் சீனா..! இனி சீனாவுக்கும் இந்தியா தான் சப்ளையர்..! எதில் தெரியுமா..?

உலக பெரும்புகைக்காரர்கள் நம் சீனர்கள் தானாம். உலகில் விற்கப்படும் மூன்றில் ஒரு பங்கு சிகரெட்டுகள் சீனர்களால் ஊதப்படுவதாக உலக சுகாராத அமைப்பு சொல்கிறது. சீனாவில் 2018 கணக்கீடுகளின் படி சுமாராக 30 கோடி பேர் சிகரெட் புகைக்கிறார்களாம். உலகில் அதிகம் சிகரெட் புகைப்பவர்கள் சீனர்கள், அதிக சிகரெட் விற்கப்படும் இடமும் சீனா தானே. ஒரு ஆண்டுக்கு சுமாராக 2.3 லட்சம் கோடி சிகரெட்டுகளை வாங்கி ஊதுகிறார்களாம்.

இந்தியா

உலக தரத்தில் புகையிலைப் பொருட்களை மூலப் பொருட்களாக அனுப்புவதாகட்டும், பதப்படுத்தப்பட்ட புகையிலையாகட்டும், சிகரெட்டுகளாக சுருட்டப்பட்டதாகட்டும் எல்லாவற்றிலும் இந்தியாவுக்கு தனி இடம் உண்டு. அதோடு சர்வதேச அளவில் ஒப்பிடும் போது குறைந்த விலைக்கே கிடைப்பது தான் இந்தியாவுக்கான இடத்தை எப்போதும் உறுதி செய்கிறது.

இந்தியாவுக்கு அனுமதி

ஆக இந்திய புகையிலைகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய வணிகத் துறை செயலர் அனுப் வாத்வான் பெய்ஜிங்கில் பேசி அனுமதி வாங்கி இருக்கிறார். சீனா தரப்பில் General Administration of China Customs (GACC)-ன் துணை அமைச்சர் சாங் ஜிவின் (Zhang Jiwen) பேச்சு வார்த்தையில் பங்கேற்றார். சீனாவுக்கும் இதனால் ஒருசில பில்லியன் டாலர்கள் மிச்சப்படுமாம்.

இந்தியப் புகையிலை வியாபாரம்

கடந்த 2017 – 18 நிதி ஆண்டில் இந்தியா, 934 பில்லியன் டாலர் மதிப்புக்கு புகையிலைகளை மூலம் பொருட்களாகவும், பதப்படுத்தப்பட்ட நிலையிலும், முழுவதுமாமாக தயாரிக்கப்பட்ட சிகரெட் மற்றும் சுருட்டு என அனைத்து விதங்களிலும் ஏற்றுமதி செய்திருக்கிறார்கள்.

எந்த நாடுகளுக்கு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் புகையிலைப் பொருட்களில் பெரும்பாலானவைகள் பெல்ஜியம் மற்றும் ஒருங்கிணைந்த அரபு அமீரகத்துக்குத் தான் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறதாம். மற்ற மேற்கத்திய நாடுகளுக்கும் ஒரு சில சதவிகிதம் ஏற்றுமதி செய்யபப்ட்டிருக்கிறதாம்.

ஏன் சீனாவுக்கு மட்டும்

ஏற்கனவே சொன்னது போல சீனாவில் புகைப்பவர்கள் அதிகம். அதோடு சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு நம் கனானாவில் இருந்து தான் அந்நிய செலாவணி கொடுக்க வேண்டி இருக்கிறது. அதாவது நாம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்திருக்கும் தொகையை விட 63 பில்லியன் டாலர் கூடுதலாக நாம் சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறோம். இதை அடைக்கவும், எதிர் கால புகையிலைச் சந்தைகளை வளைக்கவும் தான் இத்தனை அழுத்தம் கொடுத்து சீனாவுக்கு இந்தியப் புகையிலைகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வாங்கி இருக்கிறதாம் மத்திய அரசு.

tamil.goodreturns.in

TAGS: