இந்தியாவை சுட்டெரிக்கும் வெயில்: 50 டிகிரி செல்ஸியஸை தொட்ட வெப்பநிலை

இந்தியாவின் பல பகுதிகளில் வெயிலின் அளவு 45 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. தீவிர அனல் காற்றால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

ராஜஸ்தானில் உள்ள சுரு என்ற நகரம் இந்தியாவின் வெப்பமான நகரமாக இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையன்று அங்கு வெப்பநிலை 50.8 டிகிரி செல்சியஸ் வரை சென்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் தீவிர அனல் காற்று வீசுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் கோடைக் காலங்களில் அவ்வப்போது அதிக வெப்பநிலை பதிவாகும்.

கைரிக்ஷா ஓட்டுபவர்

ஆனால், இந்த வருடம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. வட மாநிலங்கள், மேற்கு மற்றும் தென் மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் தீவிரமாக உள்ளது.

இந்த வெயிலினால் குறிப்பாக வீடற்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, போக்குவரத்து போலீஸார், தெருக்களில் கடை வைத்திருப்பவர்கள், கைவண்டி தள்ளுபவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

வெப்பம் காரணமாக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து மக்கள் வெளிவர தயாராக இல்லை என்பதால், Swiggy போன்ற உணவு விநியாகிக்கும் ஆப்களுக்காக வேலை செய்யும் நபர்கள் வெயிலில் உணவு எடுத்துச் செல்வதால், அவர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Swiggy

உலகின் மிக வெப்பமான 15 இடங்கள் என்று எல் டொரடோ இணையதளம் திங்களன்று வெளியிட்ட பட்டியலில் குறைந்தது ஏழு இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. பாகிஸ்தானில் உள்ள எட்டு நகரங்களும் இந்தப் பட்டியலில் உள்ளன.

பாகிஸ்தானின் ஜகோபாபாத் என்ற இடத்தில் 51 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது உலகின் மிக வெப்பமான இடம் என்று அழைக்கப்படுகிறது.

தீவிர அனல் காற்றால் மக்கள் கடும் அவதி
தீவிர அனல் காற்றால் மக்கள் கடும் அவதி

பருவமழை சற்று தாமதாவதால் அடுத்த சில தினங்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் இந்தியாவின் பல நகரங்களில் தண்ணீர் பிரச்சனை அதிகமாகியுள்ளது.

தண்ணீர்
வெயில்
இந்தியாவின் பல பகுதிகளில் பொது வெளிகளில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறதுஇந்தியாவின் பல பகுதிகளில் பொது இடங்களில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது
தலைநகர் டெல்லி
டெல்லி
நீச்சல்

-BBC_Tamil

TAGS: