மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் வெளியானது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.

விஜய்யின் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு படக்குழு கடந்த டிசம்பர் 31-ந் தேதி வெளியிட்டனர். இதில் விஜய்யின் லுக் மட்டும் இடம் பெற்றிருந்தது.