அரவிந்த்சாமி நடிப்பில் படமாகும் பொள்ளாச்சி விவகாரம்

வணங்காமுடி திரைப்படம் தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி விவகாரத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரிக்கும் படம் `வணங்காமுடி’. செல்வா இயக்கும் இப்படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருகிறார். மேலும் ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்தாண்டு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி விவகாரத்தை மையமாக வைத்து வணங்காமுடி திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் அரவிந்த்சாமி ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் நடித்து இருப்பதாகவும், இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை அவர் சாதுர்யமாக எப்படி பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இப்படத்தை தமிழ் புத்தாண்டு விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.