“தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்” – (திருக்குறள் 209) என்பது திருக்குறல் அமுதமொழி!
‘காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் !’ என்னும் திரைப்படப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். பிறரைக் காதலிப்பதற்கு முன் நம்மை நாமே காதலிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
கண்ணாடி முன் நின்று எவ்வளவு நேரம் நம்மை அலங்கரித்து இரசிக்கின்றோம். நம் உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் உரிய பயிற்சி கொடுத்துப் பேணினால் உடல் நலம் பெறும்; உடல் நலம் பெற்றால் மட்டும் போதாது; உள்ளம் வளம் பெற வேண்டும்.
உள்ளம் என்பது மனவளம். மனவளம் அறிவின் ஆற்றலில் வளர்வது. ஆக மனவளமும் உடல் நலமும் அறிவாற்றலும் உள் ஊக்கமும் விடாமுயற்சியும் அயரா உழைப்பும் ஒருவனை ஆளுமை வளர்ச்சி மிக்கவனாக வெற்றியாளனாக விளங்கச் செய்யும்.
அதற்கு வித்தாக வேராக விளங்கும் சுயமதிப்புத்திறனை வளர்க்க வேண்டுமானால் நம்மை நாமே காதலிக்க கற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா!
-மயில் இதழ்