டில்லியில் காற்றுமாசை கட்டுப்படுத்த புதிய சட்டம்: மத்திய அரசு முடிவு

புதுடில்லி: டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயரதிகாரி தெரிவித்தார்.

டில்லியில் தொடர்ந்து காற்று மாசு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‛அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாய நிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதால்தான் காற்று மாசு அதிகமாகிறதா என்பது குறித்து, சிறந்த முறையில் கண்காணித்து கட்டுப்படுத்த விரிவான சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளது,’ என தெரிவித்தார்.

இது குறித்து சுற்றுச்சூழல் செயலாளர் ஆர்.பி.குப்தா, பி.டி.ஐ., அளித்த பேட்டியில் கூறியதாவது: டில்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் மாசுபாட்டைத் தொடர்ந்து கொண்டு வருவதால், நகரத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய சட்டத்தை விரைவில் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய சட்டம் டில்லி மற்றும் என்.சி.ஆர்., பகுதிகளுக்கு மட்டுமே இருக்கும். இச்சட்டத்தால் விதிக்கப்படும் அபராதம் குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்

dinamalar