இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு – மேலும் 1,206 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 42 ஆயிரத்து 766 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 லட்சத்து 55 ஆயிரத்து 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 45 ஆயிரத்து 254 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 99 லட்சத்து 33 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 1,206 பேர் உயிரழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 7 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 37 கோடியே 21 லட்சத்து 96 ஆயிரத்து 268 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

dailythanthi