குடியுரிமை திருத்தச்சட்டம் ஏன்?

புதுடெல்லி:

வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையின மக்களாக வசிக்கும் இந்து, சீக்கியர் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு, நம் நாட்டில் குடியுரிமை வழங்க மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்தது. இதற்காக, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து 2019ம் ஆண்டு பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளதை அடுத்து, அங்கு சிக்கித் தவிக்கும் மக்களை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சிகளில், மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அங்கிருந்து நூற்றுக்கணக்கான இந்துக்களும், சீக்கியர்களும் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  மத்திய பெட்ரோலியத் துறை மந்திரியும் , பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகளால் அங்குள்ள சீக்கிய மற்றும் இந்து மக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவே நாம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றினோம் என குறிப்பிட்டுள்ளார்.

(நன்றி Maalaimalar)