தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில் தினமும் சில இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்றும் 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. இன்றும் (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
தமிழகத்தில் முக்கிய இடங்களில் நேற்று பதிவான வெயில் அளவு வருமாறு:-
சென்னை நுங்கம்பாக்கம் – 94.64 டிகிரி (34.8 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம் – 98.6 டிகிரி (37 செல்சியஸ்)
கோவை – 97.16 டிகிரி (36.2 செல்சியஸ்)
குன்னூர் – 77 டிகிரி (25 செல்சியஸ்)
கடலூர் – 96.08 டிகிரி (35.6 செல்சியஸ்)
தர்மபுரி – 98.96 டிகிரி (37.2 செல்சியஸ்)
ஈரோடு – 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)
கன்னியாகுமரி – 92.84 டிகிரி (33.8 செல்சியஸ்)
கரூர் – 104.9 டிகிரி (40.5 செல்சியஸ்)
கொடைக்கானல் – 68 டிகிரி (20 செல்சியஸ்)
மதுரை – 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்)
நாகப்பட்டினம் – 93.2 டிகிரி (34 செல்சியஸ்)
நாமக்கல் – 99.5 டிகிரி (37.5 செல்சியஸ்)
சேலம் – 99.68 டிகிரி (37.6 செல்சியஸ்)
தஞ்சாவூர் – 98.6 டிகிரி (37 செல்சியஸ்)
திருச்சி – 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)
தொண்டி – 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)
தூத்துக்குடி – 89.96 டிகிரி (32.2 செல்சியஸ்)
ஊட்டி – 71.42 டிகிரி (21.9 செல்சியஸ்)
வேலூர் – 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)
Malaimalar