காமன்வெல்த் போட்டி – பளு தூக்குதலில் இந்தியாவுக்கு 3வது தங்கம் வென்றார் அச்சிந்தா ஷூலி

பெண்கள் பிரிவில் மீராபாய் சானு ஏற்கனவே தங்கப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான பிரிவில் ஜெரேமி லால்ரின்னுங்கா தங்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு 3-வது தங்கம் கிடைத்துள்ளது. காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார். ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 313 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் அச்சிந்தா ஷூலி முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.

ஏற்கனவே மீராபாய் சானு, ஜெரேமி தங்கம் வென்றுள்ள நிலையில், பளு தூக்குதலில் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றுள்ளது.

 

 

-mm