இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு – பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்துள்ளது என பில் கேட்ஸ் பாராட்டினார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான பிரதமர் மோடியின் முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பணம் செலுத்துதல், சுகாதாரம், தடுப்பூசி இயக்கம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான மோடியின் முயற்சிகளை பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் பல விஷயங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்திருப்பது, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இதில் முதலீடு செய்வதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பில் கேட்ஸ் தெரிவித்தார். தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பதில் இந்தியாவின் முயற்சிகளைப் பில் கேட்ஸ் பாராட்டினார்.

 

-mm