சிறுபான்மையினரை சிறப்பாக நடத்தும் நாடுகளின் பட்டியல்.. முதலிடத்தில் இந்தியா..

டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் கொள்கை பகுப்பாய்வு மையம் (CPA), அதன் முதல் உலகளாவிய சிறுபான்மை அறிக்கை வெளியிட்டுள்ளது. மத சிறுபான்மையினரை நடத்தும் விதத்தின் அடிப்படையில் மற்ற நாடுகளை இந்திய அமைப்பு மதிப்பிட்டது இதுவே முதல் முறை.

இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது மனித உரிமைகள், சிறுபான்மையினர், மத சுதந்திரம் மற்றும் மத சிறுபான்மையினரின் கலாச்சாரம், மத வேறுபாடுகள் ஆகியவற்றின் கருத்தியல் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்து.

110 நாடுகளில் ஆராய்ந்து எடுத்த மத சிறுபான்மையினரை சிறப்பாக நடத்தும் நாடுகளின் பட்டியலில்  இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதேபோல் மத சிறுபான்மையினரை அரசியல் மற்றும் சமூக கொள்கைகளில் உள்ளடக்கியவர்களின் பட்டியலிலும் இந்தியா முதலிடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

 

 

-news18