ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா

பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. டிசம்பர் மாதத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் 2021 மற்றும் 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இந்தியா செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தியா தலைவராக இருந்தது. இந்நிலையில், நடப்பு டிசம்பர் மாதத்துக்கு இந்தியா மீண்டும் தலைவர் ஆகியுள்ளது. நேற்று தலைமை பொறுப்பை ஏற்றது. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ், தலைவர் இருக்கையில் அமர்ந்தார். இந்தியா தலைவராக இருக்கும் இந்த மாதத்தில், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான நிகழ்ச்சிகள் ஐ.நா.வில் நடக்கின்றன. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தலைமை தாங்குகிறார்.

 

-mm