கர்நாடகாவில் சிறுமிக்கு ‘ஜிகா வைரஸ்’ பாதிப்பு உறுதி- கண்காணிப்பு தீவிரம்

கர்நாடகாவில் ராய்ச்சூரை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ‘ஜிகா வைரஸ்’ பாதிப்பு உறுதியாகி உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் முதல்முறையாக கர்நாடகாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் கூறுகையில், “மாநிலத்தில் முதல் முறையாக ஜிகா வைரஸ் பதிவாகி உள்ளது. இதனால் நிலைமையை அரசு கவனமாக கண்காணித்து வருகிறது. அதைக் கையாள எங்கள் துறை நன்கு தயாராக உள்ளது” என்றார்.

 

-mm