ரிஷியை இங்கிலாந்து பிரதமராக்கியது எனது மகள்: சுதா மூர்த்தி பெருமிதம்

பிரபல தொழில் அதிபரும், ‘இன்போசிஸ்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனருமான என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவு தீயாகப் பரவுகிறது.

அதில் சுதா மூர்த்தி கூறி இருப்பதாவது:- இது மனைவியின் மகிமை. ஒரு மனைவியால் கணவரை எப்படி மாற்ற முடியும் என்று பாருங்கள். என் கணவரை (நாராயணமூர்த்தி) நான் தொழில் அதிபர் ஆக்கினேன். என் மகள், அவளது கணவரை (ரிஷி சுனக்) இங்கிலாந்து நாட்டுக்கு பிரதமர் ஆக்கி இருக்கிறாள். இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், 2009-ம் ஆண்டு, என்.ஆர்.நாராயணமூர்த்தி-சுதா தம்பதியரின் மகள் அக்ஷதா மூர்த்தியை காதலித்து மணந்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் வயது 42 உயர்ந்தார். அந்த நாட்டின் மிக இளம் வயது பிரதமர் ரிஷி சுனக் தான்.

 

-mm