பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானை விட மிகவும் பின்தங்கியுள்ளது

உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது, 180 நாடுகளில் 161 வது இடத்தில் உள்ளது.

நிருபர்களுக்கு எல்லை இல்லை (ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்) தனது உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டின் 21வது பதிப்பை இன்று வெளியிட்டது.

பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட 180 நாடுகளில் இந்தியா 161 வது இடத்திற்கு சரிந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு 150 வது இடத்தில் இருந்த 11 வது தரவரிசைக்கு மோசமாக சரிந்து உள்ளது.

தெற்காசியாவிலும் கூட,தரவரிசைபட்டியலில் மிக மோசமான சரிவை இந்தியா கண்டுள்ளது. வங்காள தேச்ம சற்று மோசமாக இருந்தாலும், 163 வது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான் இந்தியாவை விட 150 வது இடத்தில் உள்ளது. தலிபான் அரசாங்கம் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு நண்பன் இல்லை என்று அறியப்படும் ஆப்கானிஸ்தானும் கூட 152 வது இடத்தில் உள்ளது. பூட்டான் 90 வது இடத்திலும், இலங்கை 135 வது இடத்திலும் உள்ளன.

பத்திரிகையாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று நம்பும் 31 நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. இந்தியா ஏன் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் மிகவும் பின்தங்கியுள்ளது என்பது குறித்து ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் கூறியதாவது:-

பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை, அரசியல் சார்புடைய ஊடகங்கள் மற்றும் ஊடக உரிமையின் குவிப்பு இவை அனைத்தும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் பத்திரிகை சுதந்திரம் நெருக்கடியில் உள்ளது என்பதை காட்டுகிறது என கூறி உள்ளது. நாட்டின் முன்னணி மொழியான இந்தியில் நான்கு நாளிதழ்கள் நாட்டின் முக்கால்வாசி வாசகர்களைப் பகிர்ந்து கொள்கின்றன.

-dt