அக்னி 5 ஏவுகணையின் உண்மையான திறன் மறைப்பு: சீனா குற்றச்சாட்டு

அக்னி 5 ஏவுகணையின் உண்மையான பாயும் திறனை இந்தியா மறைத்து விட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

சீன இராணுவ அறிவியல் பிரிவு ஆராய்ச்சியாளரான வென்லாங் இதுபற்றி கூறுகையில்; “அக்னி 5 ஏவுகணையின் பாய்ந்து சென்று தாக்கும் திறன் 5000 கிலோ மீட்டர் அல்ல, மாறாக 8000 கிலோ மீட்டர் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது” என்று குற்றம் சாட்டியுள்ளார். மற்ற நாடுகளிடையே பீதி உருவாகுவதை தவிர்க்கவே இந்தியா இந்த உண்மையை உலகுக்கு மறைத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக கண்டம் விட்டு கண்டம் தாண்டி 5 ஆயிரம் கிலோ மீட்டர் வரை தூரம் பாய்ந்து எதிரி இலக்குகளை துவம்சம் செய்யும் திறன் படைத்த அக்னி 5 அணு ஏவுகணை, ஒடிசாவில் நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இதன்மூலம், இந்த ஏவுகணையை தயாரிக்கும் திறன் படைத்த அமெரிக்கா உள்ளிட்ட 4 வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: