மேற்குவங்கத்தில் தரையிறங்கிய வங்கதேச போர் விமானம்!

வங்கதேசத்திற்கு சொந்தமான இராணுவ போர் விமானம் மேற்குவங்க மாநிலத்திற்குள் அவசர அவசரமாக த‌ரையிறக்கப்பட்டது. இதற்கான ‌காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வங்கதேசத்திற்கு சொந்தமான ராணுவ பயிற்சி விமானம் பி.டி.16, ‌இன்று ஜெஸ்ஸூர் நகரிலிருந்து இந்திய எல்லையில் பறந்து கொண்டிருந்த போது திடீரென மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இரு இருக்கைகள் கொண்ட அந்த போர் விமானம் ஏன் இந்தியாவிற்குள் தரையிறங்கியது என்பது குறித்து விமான பைலட் ரஷீத் என்பவரை பிடித்து சலோர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் எரிபொருள் பற்றாக்குறையால் விமானத்தை தரையிறக்கியதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர் விமானத்தில் திடீ‌ர் கோளாறு ஏற்பட்டதாகவும் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும், வங்கதேச தூதரகத்திற்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: