அன்னா ஹசாரே கார்மீது தாக்குதல்: இளைஞர் காங்கிரசார் கைது

மகாராஷ்‌டிரா மாநிலத்தில் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை ‌மேற்கொண்டுள்ள அன்னா ஹசாரே கார் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.

ஊழலுக்கு எதிரான பிரசாரத்தின் போது ராகுலுக்கு எதிரான கருத்தை அன்னாஹசாரே கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கார்மீது தாக்கு‌த‌ல் நடத்தினர். இதனையடுத்து அன்னா ஹசாரே மற்றொருகாரில் தனது பிரசார பயணத்தை தொடர்ந்தார்.

TAGS: