மும்பாய் நகரின் மீது 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களை திட்டமிட்ட முக்கிய இந்திய சந்தேக நபர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அபு ஹம்ஸா என்று அழைக்கப்படும், சையது சபியுதீன், மும்பாய் மீது தாக்குதல் நடத்திய 10 துப்பாக்கிதாரிகளை, தொலைபேசி மூலம் பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் இருந்து வழி நடத்தினார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறார்.
மூன்று நாட்களாகத் தொடர்ந்த இந்த மோதல்களில் 160-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானியர்களில் உயிர் தப்பிய ஒரேயொருவரான அஜ்மல் கசாப்புக்கு இரு ஆண்டுகளுக்கு முன்னதாக மரணதண்டனை வழங்கப்பட்டது.
–BBC