இஸ்லாமாபாத் : மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியர்களே உதவி புரிந்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி கூறியதாக அங்கிருந்து வெளிவரும் பத்திரிகை பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
மும்பை தாக்குதலை கண்காணித்து நடத்தியதாக மத்திய பாதுகாப்புப் படையினரால் அபு ஜிண்டால் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அதிகாரி இவ்வாறு கூறியிருப்பது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

























