இராணுவ வீரரை அடித்து உதைத்த பொதுமக்கள்!

இந்தியா அசாம் மாநிலத்தில் இராணுவ வீரர் ஒருவர், விறகு சுமந்து கொண்டு சென்ற இளம் பெண்ணைக் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாமின் சிப்சாகர் மாவட்டத்தில், நெட்டை புஹூரி வனப்பகுதியில் விறகு சுமந்து கொண்டு பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பயிற்சிக்காக அங்கு சீருடையில் இருந்த இராணுவ வீரர் ஒருவர்‌, அப்பெண்ணைக் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அந்நேரத்தில் அப்பெண் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அவரைக் காப்பாற்றினர். பின்னர் அந்த இராணுவ வீரரைப் பிடித்து விசாரித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

TAGS: