புனேயில் தொடர் குண்டு வெடிப்பு: முக்கிய நகரங்களில் போலீசார் உஷார்!

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நேற்று மாலையில் அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன.

ஜங்கலி மகாராஜா சாலை, டெக்கான் சாலை, கந்தர்வா திரையரங்கு அருகில் மற்றும் கார்வாரே கல்லூரி அருகில் என அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

இந்த குண்டுகள் குறைந்த சக்தி கொண்டதாக இருந்ததால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை, ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்தார்.

குண்டுவெடிப்பு பற்றி தகவல் அறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களை குறிவைத்து இந்த குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

TAGS: