இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை வேடம்!

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ஊன்று கோலாகவும் உறுதுணையாகவும் இருந்தது மத்தியில் ஆளும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசுதான். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்கத் தவறுவதும் இதே அரசுதான். இலங்கை கடற்படையை கண்டித்து இதுவரை தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் நிருபர்களிடம் கூறினார்.

மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. போராட்டம் அறிவித்திருந்தது. ஆனால் அந்த போராட்டத்தையும் தி.மு.க. கைவிட்டுவிட்டது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது.

தி.மு.க. நடத்திய டெசோ மாநாட்டின் நோக்கம் இலங்கை தமிழர்களின் பாதுகாப்புக்காக அல்ல. கருணாநிதி தன்மீதான களங்கத்தை துடைக்க நடத்திய நாடகம். தி.மு.க.வின் இந்த இரட்டை வேடத்தை மக்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள் என அவர் கூறினார்.

TAGS: