வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அக்கறையும் கவனமும் தேவை

சிலாங்கூர் மக்கள் கூட்டணி உறுப்பு கட்சிகளுக்கிடையே தொகுதி உடன்பாடு காணப்படுகின்ற இவ்வேளையில் மக்கள் கூட்டணியின் மேல் மிக நம்பிக்கையுள்ளவன் என்பதாலும் மக்கள் கூட்டணியைப் பெரும் அளவில் ஆதரிப்பவன் என்பதாலும் மக்கள் கூட்டணியின் உறுப்பு கட்சியின் சுபாங் ஜெயா கிளையின் உறுப்பினர்கள் என்பதாலும் அரசியலில் மேம்பாடான நல்ல மாற்றங்கள் வர வேண்டும் என்பதில் உறுதியாவன் என்கின்ற காரணத்தினாலும் இந்தக் கருத்தினை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளேன். கடந்த காலங்களில் பேராக்கிலும் மேலும் சில இடங்களிலும் கட்சி தாவல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டது கேவலமான ஒன்று. அதனால் பேராக்கில் நடந்த கட்சி தாவலினால் ஆட்சியைத் தேசிய முன்னணியினர் பறித்துக் கொண்டனர். அதற்கு பலவீனமான அந்த வேட்பாளர்கள்தான் பெரும் காரணம்.

மீண்டும் அப்படிப்பட்ட பலவீனமானவர்கள் கட்சி மேலிடம் அவசரப்படாமலும் நிதானமாகவும் நேர்மையாகவும் உண்மையானவர்களையே வேட்பாளர்களாகத் தேர்வு செய்து வரும் பொதுத்தேர்தலுக்குக் காரணமானவர்களை மக்களுக்குச் செய்பவர்களையே தேர்ந்தெடுத்து வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தவறு செய்துவிட்டால் மீண்டும் ஒரு மாநிலத்தை இழக்க நேரிடும்.

அவசரம் வேண்டாம்!

நிதானமாகவும் நேர்மையாகவும் மக்களுக்குச் சேவை செய்யக்கூடியவர்களாகவும் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

-ஐயன்