போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு மன்மோகன்சிங் வைத்த விருந்து

இந்திய மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெறும் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே 3 நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அழைப்பை ஏற்று, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியான பிறகு முதல் முறையாக ராஜபக்சேயை சந்தித்து பேசிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கை பக்தர்கள் மீது தாக்குதல் மற்றும் விளையாட்டு அணியை திருப்பி அனுப்பிய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை ராஜபக்சே பேசினார்.

பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் நேற்று டெல்லியில் விருந்து கொடுத்தார். விருந்து நிகழ்ச்சியின் போது பிரதமர் மன்மோகன்சிங்கும், இலங்கை அதிபர் ராஜபக்சேயும் சந்தித்து பேசினார்கள்.

அப்போது ராஜபக்சே, பிரதமரிடம் இலங்கையில் கடைசி கட்ட போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்தியா அளித்த நிதிஉதவியுடன் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்றும், இலங்கையில் நடந்த கடைசி கட்ட போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் பணிகள் முழுவேகத்தில் நடைபெற்று வருவதாகவும் அதற்கான பல்வேறு கட்ட பணிகளை தனது அரசு செய்து வருவதையும் முழுமையாக விவரித்தார்.