தமிழகம்: போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து சேலத்தில் தீக்குளித்து உயிர்தியாகம் செய்த விஜயராஜின் இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன்; “இது போல் தன்னையே மாயத்துகொள்வது ஏற்புடையது அல்ல. கரும்புலிகள் நூறு எதிரிகளை அழித்துவிட்டு தன்னை அழித்துகொள்வார்கள். உயிரை மாய்த்துகொள்ள நினைத்தால் தனுவாக மாறுங்கள் கரும்புலியாக மாறுங்கள்” என்றார்.
“எங்கள் பேச்சை கேட்டு தான் தம்பி விஜயராஜ் உணர்வு பெற்றதாக சொல்கிறார்கள். நம்முடைய பேசும் எழுத்தும் எதிரிகளை வீழ்த்தவில்லையே ஆற்றாமையில் தன்னை மாய்த்து கொள்கிற தோழர்களை வீழ்துகிறதே என்ற வேதனை என்னை வாட்டுகிறது. நாம் உணர்ச்சி வசப்படுகிறோம். வலிமை உள்ளவனை எதிர்க்கும் போது அவன் எந்த தளத்தில் வலிமையாக உள்ளான் என ஆராய வேண்டும்” என்று திருமாளவன் கூறினார்.
“இது ஊக்கப்படுத்துவது போல் ஆகிறது. உயிர் தியாகம் அளப்பரியது; மதிக்கிறோம் தலை வணங்குகிறோம். ஆனாலும் இது போல் தன்னையே மாயத்துகொள்வது ஏற்புடையது அல்ல. யாரும் தீக்குளிக்காதீங்க; கரும்புலியாக மாறுங்க” என்றார் அவர்.
“கொடுங்கோலன் ராஜபக்சேவை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தும் அவனை ஒன்றும் செய்யாமல் பூனைபோல் திரும்பி வந்துவிட்டு இப்போது புலிபோல் பேசும் திருமாளவன், ஈழத்தை வைத்து அரசியல் நடத்தும் ஒரு நடை பிணம்” என்கிறார் ஈழ உணர்வாளர் கந்தசாமி.